இன்று நடைபெற்ற ஈரோடு தவெக கூட்டத்தில் அதன் தலைவர் நடிகர் விஜய் பேசுகின்ற போது காளிங்கராயன் அனைத்து திட்டத்தை பற்றி யாரோ எழுதிக் கொடுத்ததை பேசினார்.
1946 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் சென்னை ராஜஸ்தானியின் முதலமைச்சராக பிரகாசம் அவர்கள் வருவதற்கு ஒரு வாக்கு கூடுதலாக தேவைப்பட்டபோது, அப்போது ஈரோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த தியாகி ஈஸ்வரன் அவர்களை சந்தித்து அவருடைய வாக்கினை வாங்கிய காரணத்தால் பிரகாசம் அவர்கள் முதலமைச்சராக நீடித்தார். தன்னுடைய வாக்கை கொடுப்பதற்கு முன்பாக பிரகாசம் அவர்களிடம் தியாகி ஈஸ்வரன் அவர்கள் ஒரு விண்ணப்பம் செய்தார்கள். ஈரோட்டில் இரண்டு லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுவதற்காக கீழ் பவானி அணைத்தட்டத்தை கொண்டு வர வேண்டும் எனக் கூறியிருந்தார். அதனை ஒத்துக் கொண்ட பிரகாசம் அவர்கள் அதனை நிறைவேற்றித் தெளிவாக உறுதி அளித்தார்கள். அதுக்கு பின்னர் 1947 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் காமராஜர் அவர்கள் முதலமைச்சர்கள் காலத்தில் கீழ்பவானி அணை கட்டப்பட்டு கீழ்பவானி பாசன திட்டத்திற்கு இரண்டு லட்சத்தி ஏழாயிரம் ஏக்கர் நீர் வசதி பெறுவதற்கு ஏற்பாடு செய்தார்கள்.
தியாகி ஈஸ்வரன் அவர்கள் சுதந்திரப் போராட்டத்திற்காக ஏழரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மாமனிதர். அவரால் கொண்டுவரப்பட்டது தான் கீழ்பவானி பாசனத் திட்டம்.
காலிங்கராயன் வாய்க்காலை பற்றி எழுதிக் கொடுத்தவர்கள் எதனால் கீழ்பவானி பாசன திட்டத்தை மறந்து போனார்கள். அதுவும் செங்கோட்டையன் அவர்கள் இதை எழுதிக் கொடுப்பவர்களுக்கு தகவல் கொடுக்காமல் இருந்தது மிகுந்த வருத்தத்தை தருகிறது .
நீர்ப்பாசனத்தை பற்றி எதுவும் அறியாத விஜய் அவர்கள் ஈரோட்டில் வந்து நீர்ப்பாசனத்தை பற்றி பேசியது மிகுந்த கண்டனத்துக்குரியது.