நீதிமன்ற உத்தரவை மீறி நெல்லையில் "சாதி, மதம் இல்லை" சான்றிதழ் பெற விண்ணப்பித்தவர்கள் அலைக்கழிப்பு: காரணங்களை தேடி தேடி தட்டி கழிக்கும் அதிகாரிகள்
சென்னை உயர்நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவு இருந்தும், திருநெல்வேலி மாவட்டத்தில் "சாதி, மதம் இல்லை" (No Caste No Religion) என்ற சான்றிதழைப் பெற விண்ணப்பிக்கும் பொதுமக்களை வருவாய்த்துறை அதிகாரிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக அலைக்கழித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
"சாதி, மதம் இல்லை" எனச் சான்றிதழ் கோரும் விண்ணப்பதாரர்களுக்கு அதை வழங்க மறுக்கக் கூடாது என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது குழந்தைகளுக்கு "சாதி, மதம் இல்லை" எனச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தபோது, அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதியரசர்கள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த ஜூன் 10-ம் தேதி அன்று ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது
"சாதி, மதம் இல்லை" என்று சான்றிதழ் கோரும் விண்ணப்பங்களை ஏற்று, சான்றிதழ் வழங்க ஏதுவாக தமிழக அரசு உரிய அரசாணையைப் பிறப்பிக்க வேண்டும்.
ஜாதி மதம் இல்லை என்று சான்றிதழ் கோர்வோருக்கு ஒரு மாத காலத்திற்குள் சான்றிதழை வழங்க வேண்டும்.நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை, குறிப்பிட்ட விதிமுறை இல்லை என்ற காரணத்தைக் கூறி வருவாய்த்துறை அதிகாரிகள் மறுக்க முடியாது என்று தெளிவாகச் சுட்டிக்காட்டினர்.
தமிழகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த தீர்ப்பு வருவாய்த்துறை அதிகாரிகளை மட்டும் சென்றடையவில்லை போல ?
உயர்நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. பொதுமக்கள் தாங்கள் விரும்பினால், எந்தச் சாதியையும் எந்த மதத்தையும் சாராதவர் என்று விண்ணப்பித்து, அதற்கான உறுதிமொழியை அளித்தால், அவர்களுக்குச் சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது, சமூக அடையாளங்களைத் துறக்க விரும்புவோருக்கு ஒரு புதிய வழியைத் திறந்துவிட்டுள்ளது. ஆனால் இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத வருவாய்த்துறை அதிகாரிகள் நூற்றில் ஒருவர் மட்டும்தான் இது போன்ற சான்றிதழ்களை பெற விண்ணப்பிப்பார்கள்.. அவர்களையும் இல்லாத காரணத்தை சொல்லி நீதிமன்றத்தின் பழைய உத்தரவை காட்டி அரசிடம் இதுபோன்று எந்த ஒரு உத்தரவும் இல்லை என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பி விடுகிறார்கள். படித்தவர்கள் சட்டத்தின் மூலம் போராடி சான்றிதழ்களை பெற்று விடுகிறார்கள். பாமர மக்கள் இவர்கள் கூறும் தகவல்களை மட்டும் கேட்டுவிட்டு இந்த ஜாதியும் எந்த மதத்தையும் சாராதவர் என்ற சான்றிதழை வாங்கும் முயற்சியை கைவிட்டு சென்று விடுகிறார்கள்.
நெல்லையில் தொடரும் அலட்சியம் :
நீதிமன்றத்தின் இந்தத் தெளிவான மற்றும் பரவலாக அறியப்பட்ட உத்தரவு இருந்தபோதிலும், நெல்லை மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் இதனை நடைமுறைப்படுத்துவதில் அலட்சியம் காட்டுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் பல அதிகாரிகளுக்கு இது போன்று ஒரு உத்தரவு இருப்பது கூட தெரியவில்லை.
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் தனது உறவினர் பெண் ஒருவருக்கு சான்றிதழ் கோரி விண்ணப்பித்து உரிய வழிமுறைகளில் பெற முயற்சித்தாலும் கூட அவர் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார். உட்பட நீதிமன்ற உத்தரவு குறித்து பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு விவரங்கள் தெரியாத காரணத்தினாலேயே இந்த அலைக்கழிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. பதிவில் இருப்பவர்களுக்கு அரசு ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாதங்களில் வெளியாக கூடிய நீதிமன்ற உத்தரவு மற்றும் முக்கிய தகவல்கள் குறித்து ஒரு நாள் பயிற்சி பட்டறை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் பல அதிகாரிகளுக்கு நடைமுறை நிகழ்வுகள் நீதிமன்ற உத்தரவுகள் என்னென்ன இருக்கிறது என்பது முழுமையாக தெரியவரும் என்று பொதுமக்கள் கூறுகிறார்கள். அதிகாரிகளுக்கு அலட்சியப் போக்கால் பொதுமக்கள் தொடர்ந்து அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து, தங்கள் நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்க வேண்டியுள்ளது.
பொதுமக்களின் எதிர்பார்ப்பு
நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, தமிழக அரசு விரைந்து உரிய அரசாணையைப் பிறப்பித்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகளுக்குத் தெளிவான சுற்றறிக்கைகள் அனுப்ப வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சாதி மற்றும் மதமற்ற சமுதாயத்தை நோக்கிச் செல்லும் முயற்சியில், அரசின் இத்தகைய அலட்சியப் போக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. நெல்லை மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.