திருப்பரங்குன்றம் தீபத்தூரில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு குறித்து , மதுரை மாவட்ட ஆட்சியருக்கு குருதி கையெழுத்திட்டு அனுப்பிய பாஜக நிர்வாகிகள் :
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றி வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது குறித்து தமிழ்நாடு பாஜக ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டுப் பிரிவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகப் அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு பாஜக ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலாளர் சங்கர சுப்பிரமணியன்,
"உயர்நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவு இருந்தும், அதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த இந்துக்கள், முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் விதமாகத் தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவே தோன்றுகிறது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பக்தர்களின் கோரிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில், மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பினர்
அந்த கடிதத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து, பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு உடனடியாகத் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூரில் தீபம் ஏற்றுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகிகளான தமிழ்நாடு பாஜக ஆன்மீகம் மற்றும் திருக்கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சங்கர சுப்பிரமணியம், நெல்லை வடக்கு மாவட்ட பாஜக ஆன்மீகம் மற்றும் திருக்கோவில் மேம்பாட்டு பிரிவு தலைவர் சுப்பிரமணியம் என்ற சந்தோஷ் குருதி (ரத்த) கையொப்பமிட்ட இந்த மனு, மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டது.