திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: 'அளவை கல்' சர்ச்சைக்கு பாஜக ஆன்மீகம் மற்றும் திருக்கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சங்கர சுப்பிரமணியன் விளக்கம் :
திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது தீபத் தூண் அல்ல, அது வெறும் அளவை கல் தூண் (Survey Stone Pillar) தான் என்று எதிர்க்கட்சிகள் பரப்பி வரும் பொய்யான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்து, தமிழக பாஜக ஆன்மீக மற்றும் திருக்கோவில் மேம்பாட்டுப் பிரிவு மாநில செயலாளர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் ஒரு வீடியோ விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
சங்கர சுப்பிரமணியன் தனது வீடியோவில், சர்ச்சைக்குரிய தூண் அளவை கல்லை விட மிகவும் வித்தியாசமானது என்பதைச் சுட்டிக்காட்டினார். பொதுவாக, சர்வே கல் அல்லது அளவைக் கல் என்பது 3 அடிக்கு மேல் இருக்காது என்று அவர் விளக்கமளித்தார். ஆனால் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூண் அதைவிடப் பல மடங்கு உயரமானது. மேலும், உண்மையான அளவைக் கல்லின் உச்சியில் தீபம் ஏற்றுவதற்குரிய குழி போன்ற அமைப்பு இருக்காது என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்த விளக்கத்தின் மூலம், மலையின் உச்சியில் உள்ள தூண் என்பது பக்தர்கள் விளக்கேற்றப் பயன்படுத்தப்படும் தீபத் தூணே அன்றி, வெறும் அளவைக் கல்லை அல்ல என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய பிறகும், அதை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பதை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.அரசின் இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மட்டுமல்லாது, இந்து மதத்தின் நம்பிக்கையையும் கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக, அதற்கு எதிராக மேல்முறையீடு செய்வது, பக்தர்களின் மத நம்பிக்கைகளை அவமதிப்பதாகவும், உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் பாஜக மாநில நிர்வாகி சங்கர சுப்பிரமணியன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அளவை கல்லை முன்வைத்து சங்கர சுப்பிரமணியன் அவர்கள் நேரடியாகப் பேசிய இந்த வீடியோ, எதிர்க்கட்சிகளின் தவறான பிரச்சாரத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இது, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் மீண்டும் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.