Skip to main content

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் : தமிழக அரசின் மேல்முறையீடு இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றிக் கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்த நிலையில், அதனை எதிர்த்து தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதற்குத் தமிழக பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் வெற்றிவேல் அவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

 இந்த விவகாரம் கோடிக்கணக்கான இந்து மக்களின் மத உணர்வுகளைப் புறக்கணிப்பதாக உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நீண்ட காலமாக சர்ச்சையில் இருந்து வந்த திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், சமீபத்தில் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இது இந்து பக்தர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்த நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து அறநிலையத்துறை மேல்முறையீடு செய்ய முடிவெடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், தமிழக பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் வெற்றிவேல் இதுகுறித்து கூறும்போது :

"தமிழக அரசின் இந்த முடிவு கோடிக்கணக்கான இந்து மக்களின் உணர்வைச் சிறிதும் கண்டுகொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட ஒரு சடங்குக்கு நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்ற பின்னரும், அதனை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்வது வருத்தம் அளிக்கிறது.

தீபத்தை "கலவர தீபமாக" மாற்ற முயற்சி: கார்த்திகை தீபத்தை "கலவர தீபமாக" மாற்ற மதவெறி சக்திகள் எல்லா வகையிலும் முயலுகிறார்கள் என்று மதுரை எம் பி வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார். இது ஒட்டுமொத்த முருக பக்தர்கள் மற்றும் இந்து மக்களிடையே வெறுப்பை சம்பாதிக்க கூடிய அவச்சொல். மக்கள் பிரதிநிதியாக பொறுப்பில் இருந்து கொண்டு இப்படி பொறுப்பற்ற முறையில் மதங்கள் குறித்து மதுரை எம். பி வெங்கடேசன் எதிர்மறையாக பேசி வருவது மிகவும் கண்டனத்துக்குரியது.

 மேலும் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவது போல, திருப்பரங்குன்றம் மலையிலும் கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது பக்தர்களுக்கு மிகவும் புனிதமான ஒரு நிகழ்வாகும். கோயில்கள் மற்றும் பக்தர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய அறநிலையத்துறை, இந்துக்களின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படுவது ஏற்புடையது அல்ல. உடனடியாக மேல்முறையீடு செய்யும் முடிவைத் தமிழக அரசு கைவிட்டு, இந்துக்களின் பாரம்பரிய நம்பிக்கைகளைப் பாதுகாக்க வேண்டும்," தவறினால் வரக்கூடிய 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் குறிப்பாக இந்துக்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Popular posts from this blog

நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு

  திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார்  "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார் திருநெல்வேலி: 03.11.2025 திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது:  "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம்.  ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்." அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற...

எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி

" நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி : "திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை த...

"நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கொடுத்த அல்வா" கே. என். நேரு துறையில் ஊழல் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்: நெல்லையில் பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகி மலையரசன் என்பவரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன:  டெண்டர் ஊழல்: நகராட்சி டெண்டர் கமிஷன் விவகாரத்தில் சுமார் ₹1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பணி நியமன ஊழல்: நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடல்: இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் புகார்கள் எழுந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது தமிழக முதல்வரோ அல்லது தமிழக காவல்துறையோ இது...