Skip to main content

நெல்லையில் மோட்ச தீபம் ஏற்ற முயன்ற 30க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கைது

நெல்லை சந்திப்பில் பரபரப்பு: பூரண சந்திரன் மறைவுக்கு மோட்ச தீபம் ஏற்ற முயன்ற பாஜகவினர் 30 பேர் அதிரடி கைது!


மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி கோரி தனது இன்னுயிரைத் தியாகம் செய்த பூரண சந்திரனின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, திருநெல்வேலியில் மோட்ச தீபம் ஏற்ற முயன்ற பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைக் காவல்துறை கைது செய்தது.
மதுரை திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் பாரம்பரிய முறைப்படி தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தவர் பூரண சந்திரன். இக்கோரிக்கை நிறைவேறாத விரக்தியில் அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தமிழக பாஜகவினர் மற்றும் ஆன்மீகவாதிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது தியாகத்தைப் போற்றும் வகையிலும், மறைந்த ஆன்மா சாந்தியடையவும் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, இன்று திருநெல்வேலி வடக்கு மாவட்ட அனைத்து மண்டல் தலைவர்கள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய நுழைவாயில் முன்பாக "மோட்ச தீபம்" ஏற்றும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.இந்த நிகழ்விற்குப் பின்வரும் முக்கிய நிர்வாகிகள் தலைமை வகித்து முன்னின்று நடத்தினர்:

மலையரசன் (தச்சநல்லூர் நகர் தெற்கு மண்டல் தலைவர்)., முருகதாஸ் (பட்டியல் அணி மாநில செயலாளர்)., சத்ய நாராயணன், ஆரியங்காவு (மண்டல் பொது செயலாளர்கள்)
 J.V. மாரியப்பன் (தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர்) முருகப்பா (நெசவாளர் பிரிவு மாநில செயலாளர்)
   மற்றும் ஏராளமான மண்டல் நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.
ரயில் நிலையத்தின் முன்பு நிர்வாகிகள் விளக்கேற்றத் தொடங்கியபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மாநகரக் காவல்துறை அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். "பொது இடத்தில் அனுமதியின்றி இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தக் கூடாது" எனப் போலீசார் எச்சரித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர், "இது ஒரு அமைதியான அஞ்சலி நிகழ்வு, இதற்கு ஏன் முட்டுக்கட்டை போடுகிறீர்கள்?" என்று காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்

Popular posts from this blog

நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு

  திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார்  "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார் திருநெல்வேலி: 03.11.2025 திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது:  "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம்.  ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்." அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற...

எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி

" நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி : "திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை த...

"நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கொடுத்த அல்வா" கே. என். நேரு துறையில் ஊழல் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்: நெல்லையில் பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகி மலையரசன் என்பவரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன:  டெண்டர் ஊழல்: நகராட்சி டெண்டர் கமிஷன் விவகாரத்தில் சுமார் ₹1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பணி நியமன ஊழல்: நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடல்: இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் புகார்கள் எழுந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது தமிழக முதல்வரோ அல்லது தமிழக காவல்துறையோ இது...