Skip to main content

நெல்லையில் நடிகர் ரியோ : ஆண் பாவம் பொல்லாதது குழு நெல்லை வருகை

ஆண்பாவம் பொல்லாதது பட குழு நெல்லையில் பேட்டி.

இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ, மாளவிகா, விக்னேஷ் காந்த் போன்றோர் நடிப்பில் வெளிவந்துள்ள ஆண் பாவம் பொல்லாதது திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.இந்த நிலையில் படத்தின் குழு நெல்லையில் உள்ள திரைப்படம் ஓடும் பாம்பே திரையரங்கத்திற்கு வருகை தந்தது.
அவர்களுக்கு மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து பாம்பே சினிமாஸ் முத்துக்குமார் அனைவருக்கும் சால்வை அணிவித்து கௌரவித்தார்.தொடர்ந்து திரைப்படம் குறித்து ரசிகர்களை சந்தித்த குழுவினர் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.தொடர்ந்து திரைப்படத்தின் இயக்குனர் கலையரசன்,நடிகர்கள் ரியோ,விக்னேஷ்காந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய அவர்கள் திரைப்படம் வெளியாகி நல்லமுறையில் ஓடிவருகிறது.பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக அமைந்துள்ளது மகிழ்ச்சளிக்கிறது.ஆண்களின் வலியை ஆண்பாவம் பொல்லாதது படத்தில் காட்டியுள்ளோம். ஆண்கள் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் புலம்பலை இந்த திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது ஆண்கள் பார்ப்பதற்கு வெள்ளை உடை அணிந்து பாலிசாக தெரிவார்கள் ஆனால் அவர்களது வலி அனைத்தும் பின்னால் தெரியும் அதை இந்த படம் காட்சிப்படுத்தியுள்ளது ஆண்களின் வழியை யாரும் பேசாமல் இருந்த நிலையில் நாங்கள் பேசி இருக்கிறோம் பெண்களுக்கும் இந்த திரைப்படம் மிகவும் பிடிக்கும். தோழர் என்பது மிகப்பெரிய சரியான வார்த்தை. அதனை யாரும் தப்பாக பயன்படுத்திவிட கூடாது என்பதுதான் எங்களது நோக்கம். இந்த படத்தில் தோழர் என்ற வார்த்தையை கிண்டலுக்குரியதாக நாங்கள் பயன்படுத்தவில்லை அனைவரும் தோழர் என்ற வார்த்தைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்ணியம் பேசும் படத்தில் ஆண் வில்லனாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பார் அதேபோல் இது ஆண்களுக்காக எடுக்கப்பட்ட படம் அதில் பெண் வில்லனாக காட்டப்பட்டுள்ளது. அடிப்படையில் பெண்கள் அனைவரும் தவறானவர்கள் என நாங்கள் எதுவும் சித்தரிக்கவில்லை. படத்தை முழுவதும் பார்த்தால் இது பெண்களுக்கு எதிரான படம் இல்லை என்பது அனைவருக்கும் புரியும் என தெரிவித்தார்.

Popular posts from this blog

நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு

  திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார்  "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார் திருநெல்வேலி: 03.11.2025 திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது:  "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம்.  ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்." அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற...

எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி

" நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி : "திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை த...

"நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கொடுத்த அல்வா" கே. என். நேரு துறையில் ஊழல் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்: நெல்லையில் பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகி மலையரசன் என்பவரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன:  டெண்டர் ஊழல்: நகராட்சி டெண்டர் கமிஷன் விவகாரத்தில் சுமார் ₹1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பணி நியமன ஊழல்: நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடல்: இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் புகார்கள் எழுந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது தமிழக முதல்வரோ அல்லது தமிழக காவல்துறையோ இது...