Skip to main content

தமிழகம் வரும் இந்தியாவின் தலைமகன் : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கோவையில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி 

 
பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் வருகின்ற நவம்பர் 19-ஆம் தேதி தமிழகத்தின் தொழில் நகரமான கோயம்புத்தூருக்கு வருகை தர இருக்கிறார். நாட்டின் தலைமகன் தமிழகம் வருவதை முன்னிட்டு, ஆயத்த பணிகள் மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி அவர்கள் கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெறவுள்ள 'தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025'-ஐ தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
விவசாய சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாடு, மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் அவர்களின் விவசாய முறைகளை முன்னெடுத்துச் செல்வதையும், இயற்கை மற்றும் புதுப்பிக்கத்தக்க விவசாய முறைகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
 பிரதமர் மோடி அவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்த பின்னர், தென் இந்திய மாநிலங்களில் இருந்து வந்திருக்கும் இயற்கை மற்றும் கரிம விவசாயத்தில் நிபுணத்துவம் பெற்ற சுமார் 50 முன்னணி விஞ்ஞானிகளுடன் கலந்துரையாட இருக்கிறார். இது இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்துவதற்கான புதிய கொள்கை யோசனைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும். இந்த மூன்று நாள் மாநாட்டில் 300 கண்காட்சி அரங்குகள், நேரடி செயல் விளக்கங்கள் மற்றும் விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்களின் அமர்வுகள் ஆகியவை இடம்பெற உள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவை மாநகரம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
சுமார் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், போக்குவரத்து மாற்றங்கள் குறித்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

பிரதமரின் வருகை தமிழக விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பதோடு, அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
இந்தியாவின் தலை மகனாக இருக்கக்கூடிய பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகையை முன்னிட்டு தமிழக பாஜகவின் தேர்தல் வியூகங்கள் மற்றும் பிரச்சாரங்கள் களைகட்டி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த வருகை ஒட்டுமொத்த தமிழக பாஜக நிர்வாகிகள் மத்தியிலும் ஒரு புத்துணர்ச்சியையும் புது நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது

Popular posts from this blog

நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு

  திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார்  "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார் திருநெல்வேலி: 03.11.2025 திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது:  "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம்.  ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்." அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற...

எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி

" நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி : "திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை த...

"நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கொடுத்த அல்வா" கே. என். நேரு துறையில் ஊழல் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்: நெல்லையில் பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகி மலையரசன் என்பவரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன:  டெண்டர் ஊழல்: நகராட்சி டெண்டர் கமிஷன் விவகாரத்தில் சுமார் ₹1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பணி நியமன ஊழல்: நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடல்: இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் புகார்கள் எழுந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது தமிழக முதல்வரோ அல்லது தமிழக காவல்துறையோ இது...