Skip to main content

பாஜகவிற்கு விஜய் வரவேண்டும் என்ற சபாநாயகர் ஆசை விரைவில் நிறைவேறும் : நயினார் நாகேந்திரன்

வ உ சிதம்பரனாரின் 89 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள வ உ சி மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவருடைய சிலைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 சுதந்திரப் போராட்ட தியாகிகளை போற்றுவதில் பிரதமர் மோடி முதல் நபராக இருக்கிறார். அறிவு திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தி விட்டு அதற்கு எதிராகவே திமுகவினர் பேசியிருக்கிறார்கள். திமுகவினர் நாட்டு மக்கள் நலனுக்காக ஒருபோதும் உச்ச நீதிமன்றம் செல்வதில்லை. 

கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய அரசுக்கு எதிராகவே தமிழக அரசு போராடி வருகிறது. தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. எஸ் ஐ ஆருக்கு எதிராக வருவாய் துறை அலுவலர்களை திமுக அரசு தான் தூண்டிவிட்டுள்ளது.

 துப்புரவு பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகு இப்போது அவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு தேவை எல்லாம் நிரந்தர உணவு மட்டுமே. 

திமுகவுக்காக வேலை பார்த்த பிரசாந்த் கிஷோரின் கட்சி, பிகார் தேர்தலில் இரண்டு சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அவர்களை வைத்து வேலை பார்த்தால் என்னவாகும். 

விஜய் பாஜகவுடன் கூட்டணியில் இணைவார் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேசியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், அவர்களுடைய ஆசை நிறைவேறும். கூட்டணி தொடர்பாக ஜனவரியில் பேசி முடிவெடுக்கப்படும். கூட்டணியால் மட்டும் ஆட்சியை பிடித்து விட முடியாது.

 இதற்கு முந்தைய காலங்களில் வலுவான கூட்டணி அமைத்த கட்சிகள் கூட தோல்வியை சந்தித்து இருக்கின்றன. திமுக ஆட்சியில் சொத்து வரி உயர்ந்திருக்கிறது. சட்டம்- ஒழுங்கு சரியில்லை. 

பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது. கிராமங்கள் தோறும் கஞ்சா புழக்கத்தில் உள்ளது. திமுக அரசு அதை கண்டும் காணாமல் உள்ளது. மக்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை. தமிழக மக்களை விட திமுக அரசு தன் மக்களே முக்கியம் என்று உள்ளது. துணை முதல்வர் உதயநிதியை முதல்வர் ஆக்குவதற்காக திமுக முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்றார். இதில் நெல்லை மாவட்ட பாஜக தலைவர் முத்து பலவேசம், மாவட்ட ஓபிசி அணி தலைவர் ராஜா மணிகண்டன், மாவட்ட பட்டியல் அணி தலைவர் தினேஷ், மாவட்ட செயலாளர் மற்றும் பொருளாளர், மாநில இளைஞரணி துணைத் தலைவர்கள் அசோக் மற்றும் கமலேஷ் உட்பட பாஜக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு

  திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார்  "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார் திருநெல்வேலி: 03.11.2025 திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது:  "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம்.  ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்." அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற...

எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி

" நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி : "திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை த...

"நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கொடுத்த அல்வா" கே. என். நேரு துறையில் ஊழல் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்: நெல்லையில் பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகி மலையரசன் என்பவரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன:  டெண்டர் ஊழல்: நகராட்சி டெண்டர் கமிஷன் விவகாரத்தில் சுமார் ₹1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பணி நியமன ஊழல்: நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடல்: இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் புகார்கள் எழுந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது தமிழக முதல்வரோ அல்லது தமிழக காவல்துறையோ இது...