Skip to main content

பேருந்து நிலையத்தில் பெண்களுக்கென பிரத்யேக ஆட்டோ ஸ்டாண்ட் ஏற்படுத்தித் தர மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்..

உலக நாடுகளே வியக்கும் வண்ணம் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள அதே நேரம் நெல்லையில் அவசரத்திற்கு சிறுநீர் கழிக்க கூட வசதியின்றி சாலையிலேயே காத்திருக்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் !
பேருந்து நிலையத்தில் பெண்களுக்கென பிரத்யேக ஆட்டோ ஸ்டாண்ட் ஏற்படுத்தித் தர மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்..

ஆண்களுக்கு இணையாக பெண்கள் பல்வேறு துறைகளிலும் தங்கள் சாதனைகளை படைத்து வருகின்றனர். பயணிகள் ஆட்டோ தொடங்கி பேருந்து விமானம் என அனைத்தையும் இயக்கும் திறமைப் படுத்தவர்களாக வளர்ந்துள்ளனர். குறிப்பாக ஆண்கள் மட்டுமே கிரிக்கெட் விளையாட்டில் சாதித்து வந்த நிலையில் இந்திய பெண்களும் உலக கோப்பை மகளிர் கிரிக்கெட்டில் உச்சபட்ச சாதனையை படைத்துள்ளனர்.


இந்த நிலையில் நெல்லையில் மாநகரப் பகுதியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஆண்களுக்கு இணையாக பெண்களும் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகின்றனர்
 நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் வரை சம்பாதிக்கிறோம். காலையில் வீட்டை விட்டு புறப்பட்டால் சாலையில் தான் வாழ்க்கை எங்களுக்கென்று தனி ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்று இல்லை ! அவசரத்திற்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் கூட புதிய பேருந்து நிலையம் கழிப்பறைக்கு செல்ல வேண்டும். அல்லது வீட்டுக்கு செல்ல வேண்டும். இந்த நிலை மாறுவதற்கு நெல்லை மாநகரில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கென தனியாக ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் ஏற்பாடு செய்து தர வேண்டும். அதிகமான பயணிகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் எங்கள் வாழ்வாதாரம் மேம்படும். இப்போது 17 பேர் ஆட்டோ ஓட்டி வருகிறோம் மேலும் 20 பேர் பயிற்சி பெற்று நிற்பதற்கு உரிய ஆட்டோ ஸ்டாண்ட் இல்லாததால் வர முடியாமல் உள்ளனர் அவர்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும். எனவே எங்களுக்கு ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் ஏற்பாடு செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுகுமாரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கையை ஏற்று அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஆட்சியர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
பேட்டி உள்ளது

Popular posts from this blog

நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவிக்கு பாலியல் மிரட்டல் ??கல்லூரி பேராசிரியை மீது மாணவி ஆட்சியரிடம் புகார் : பரபரப்பு

  திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவி பாலியல் புகார்  "என் உயிருக்கு ஆபத்து என மிரட்டுகின்றனர்" - பேராசிரியை மீது ஆட்சியரிடம் மாணவி கண்ணீர் புகார் திருநெல்வேலி: 03.11.2025 திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். சுகுமாரிடம் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவி விவரித்ததாவது:  "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாகப் பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம்.  ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்." அந்தப் புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, தன்னைப் பற்றித் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற...

எங்கள் மாநில தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான் !! சபாநாயகரின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் C. அசோக் பதிலடி

" நயினார் நாகேந்திரன் மற்றொரு முகத்தை காட்டியுள்ளார்" என்ற சபாநாயகரின் பேச்சுக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநில துணை தலைவர் அசோக் பதிலடி : "திருப்பரங்குன்றம்" மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதித்து நீதிமன்றம் தீபம் ஏற்றி வழிபட அனுமதி வழங்கிய நிலையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் பல்வேறு இடங்களில் செய்தியாளர் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் பல உண்மைகளை பேசி வருவதால் , திமுகவால் அந்த உண்மைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் திமுக விற்கும் நெடுந்தூரம். நயினார் நாகேந்திரனின் மற்றொரு முகத்தை அவர் காட்டியுள்ளதாக தமிழக சபாநாயகர் பேசி வருகிறார். எங்கள் மாநிலத் தலைவருக்கு என்றுமே ஒரே முகம் தான். அது அன்பால், பண்பால், ஜாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் அந்த ஒற்றை முகம் தான்.. ஒருவேளை தேர்தல் நெருங்குகின்ற காரணத்தினால் எங்களது மாநிலத் தலைவரின் விமர்சனத்தை த...

"நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கொடுத்த அல்வா" கே. என். நேரு துறையில் ஊழல் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்: நெல்லையில் பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களைச் சுமத்தி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகி மலையரசன் என்பவரால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் உள்ளாட்சித் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன:  டெண்டர் ஊழல்: நகராட்சி டெண்டர் கமிஷன் விவகாரத்தில் சுமார் ₹1020 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பணி நியமன ஊழல்: நகராட்சித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடல்: இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் புகார்கள் எழுந்தபோதிலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது தமிழக முதல்வரோ அல்லது தமிழக காவல்துறையோ இது...