பீஹார் வெற்றி , 2026 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் : பாஜகவின் வெற்றி நாட்கள் நெருங்கி கொண்டு இருக்கிறது
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும்: நெல்லை மாவட்ட தலைவர் ஜே.வி. மாரியப்பன் நம்பிக்கை
பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி பெற்ற மிகப்பெரிய வெற்றி, 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக கூட்டணிக்கு அமோக வெற்றியைத் தரும் என தமிழக பாதுகாப்பு இலக்கிய மற்றும் தமிழக நல்வாழ்வு முன்னேற்றம் நெல்லை மாவட்டத் தலைவர் ஜே.வி. மாரியப்பன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்தியிலும் தொடரும் நல்லாட்சி இந்நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது எனவும் அவர் கூறினார்.
“சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான NDA கூட்டணி ஆட்சிப் பொறுப்பை பெற்றுள்ளது. மக்களின் ஆதரவைப் பெற்று நரேந்திர மோடி தலைமையிலான நீண்ட நாள் பாஜக ஆட்சிக்கு எதிராக வந்த மக்கள் ஆதரவு ஒரு சான்றாகும். இதேபோன்ற சாதனைக்கு தமிழகத்திலும் வாய்ப்பு அதிகம் உள்ளது,” என்றார்.
“தமிழகத்தில் மத்திய அரசு மீது ஒரு புதிய நம்பிக்கை உருவாகி வருகிறது. மத்திய அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு மக்களுக்கான திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை அளித்து வருகிறது. இதன் பலனை தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்திய BJP அரசின் கொள்கைகளை பெரிதும் பாராட்டி வருகின்றனர்,” என்றார்.
வரவிருக்கும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயமாக அமோக வெற்றி பெறும் என்றும், மத்தியிலும் தொடரும் நல்லாட்சி தமிழக மக்களின் மனநிலையை மாற்றி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“எதிர்க்கட்சிகளின் தூய்மை இல்லாத அரசியல், ஊழல், குடும்ப ஆதிக்கம் ஆகியவை மக்கள் மத்தியிலும் மாநிலத்திலும் மாற்றத்தை விரும்பும் சூழலை உருவாக்கியுள்ளன. இதனால் 2026 தேர்தலில் பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெறும். தமிழகத்தில் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை,” என்று ஜே.வி. மாரியப்பன் தெரிவித்தார்.
---